பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலையில் நிற்காத பஸ்கள் கண்காணிக்க குழு அமைப்பு

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:'திருப்பூர் - திருச்சி இடையே இயங்கும் பஸ்கள் குளித்தலையில் நின்று செல்ல வேண்டும்,' என, டிரைவர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து காங்கயம், வெள்ளகோவில், கரூர், குளித்தலை வழியாக திருச்சிக்கு பஸ் இயக்கப்படுகிறது. காலை, 4:00 முதல், நள்ளிரவு, 12:30 மணி வரை அரைமணி நேரத்துக்கு ஒரு பஸ் திருச்சிக்கு இயக்கப்படுகிறது. கரூர் கடந்த பின், பல பஸ்கள், குளித்தலை செல்லாமல் புறக்கணித்தன. இதுதொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கரூர், திருச்சி மற்றும் கோவை மண்டலம் சார்பில், 'திருச்சி செல்லும் அனைத்து பஸ்களும் குளித்தலை பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்,' என, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் - திருச்சி இடையே இயங்கும் இரவு நேர பஸ்கள் குளித்தலை செல்லாமல், பை பாஸில் பயணிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து 'ஒன்-டூ-ஒன்' தவிர, பிற பஸ்கள் குளித்தலை செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பஸ்களின் இயக்கம் குறித்து கண்காணிக்க, ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X