பொது செய்தி

தமிழ்நாடு

'ராக்கெட்' ஏவுதல் நிகழ்ச்சி: பள்ளி மாணவர் பரவசம்

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:ஸ்ரீ ஹரிகோட்டாவில், திருப்பூர் -- மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சந்தோஷ், முகமது தாகிர், ஆறாம் வகுப்பை சேர்ந்த ரோகித், ஏழாம் வகுப்பை சேர்ந்த மாதேஷ், எட்டாம் வகுப்பை சேர்ந்த முகமது மர்சூக் ஆகியோர் ராக்கெட் ஏவுவதை நேரில் கண்டுகளித்தனர்.பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன் மாணவர்களை அழைத்து சென்றார். அவர் கூறுகையில், ''ஒவ்வொருமுறை ராக்கெட் ஏவும் போதும் பள்ளியிலே நேரடியாக ஒளிபரப்புவோம். கடந்தமுறை கட்டுரை போட்டி நடத்தி வெற்றி பெற்ற நான்கு மாணவர்களை, 'சந்திராயன் 2' ஏவுவதை நேரடியாக அழைத்து சென்று காண்பித்தோம்.இம்முறை, 'பி.எஸ்.எல்.வி., சி - 47' ராக்கெட்டை நேரில் காணும் வாய்ப்பை வழங்கினோம்.எதிர்காலத்தில் மாணவிகளையும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X