பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டினால் அபராதம்:சுகாதாரம் காக்க நகராட்சி முடிவு

Added : நவ 29, 2019
Share
Advertisement
பல்லடம்:பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து, சுகாதாரத்தை பேணிக்காக்க, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில், நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.பல்லடம் நகராட்சி, 18 வார்டுகளில், பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில், குப்பைகள் வீசப்படுவதை

பல்லடம்:பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து, சுகாதாரத்தை பேணிக்காக்க, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில், நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.பல்லடம் நகராட்சி, 18 வார்டுகளில், பொது இடங்களில் குப்பை கொட்டப்படுவதால், சுகாதார கேடு ஏற்படுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில், குப்பைகள் வீசப்படுவதை தடுக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது.அவ்வகையில், குப்பை கொட்டுபவர்களை, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணித்து அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி தீர்மானித்துள்ளது. அதற்காக, குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில், எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.அதில், விதிமுறை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என, மொபைல் எண்ணுடன் அறிவிப்பு உள்ளது. அலட்சியத்துடன் குப்பைகளை வீசி செல்வதால், சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், துப்புரவு பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.இவ்வாறு, பொது இடத்தில் குப்பை கொட்டு பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, நகராட்சி நிர்வாகத்துக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X