பொது செய்தி

தமிழ்நாடு

'பட்... படார்' என, பதிலளித்து அசத்திய 'செல்லங்கள்'

Added : நவ 29, 2019
Advertisement
 'பட்... படார்' என, பதிலளித்து அசத்திய 'செல்லங்கள்'

திருப்பூர்:'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், பள்ளி மாணவருக்கான வினாடி- வினா போட்டி, திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் பள்ளி மற்றும் ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் நேற்று நடந்தது.'தினமலர்', 'பட்டம்' இதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து, 'பதில் சொல்; அமெரிக்கா செல்' எனும் வினாடி - வினா போட்டிகளை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 100க்கு மேற்பட்ட பள்ளிகளில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பெறும் இரண்டு மாணவர்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவர்.இறுதிப்போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு அமெரிக்காவில் உள்ள, 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை, நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் பள்ளியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, 300 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர்.இதில், சிறப்பாக பங்காற்றிய, 16 பேர், 'ஏ, பி, சி, டி, இ, எப், ஜி, எச்' என, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். 'ஏ' அணியில் - தியா சபீர், சாருகா, 'பி' அணியில் - கரண், சர்வேஷ், 'சி' அணியில் - பிரகல்யா, ஸ்ரீகோவிந்த், 'டி' அணியில் - பரத் கார்த்தி, தர்ணேஷ், 'இ' அணியில் - ஆகாஷ், ஜெய் ஆகாஷ், 'எப்' அணியில் - சர்வேஷ், யஷ்வந்த், 'ஜி' அணியில் - ஸ்ரீ சஞ்சய்குமார், அம்ரிதா, 'எச்' அணியில் - சித்தார்த், ஹர்ஷிதா ஆகியோர் இடம்பெற்றனர்.இவ்வணிகளுக்கு மூன்று சுற்றுகளாக, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், 'ஏ' அணியை சேர்ந்த தியா சபீர், சாருகா முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்றவருக்கு, முதல்வர் கவுசல்யா, துணை முதல்வர் யுதேஷ், 'தினமலர்' கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.மதியம், 15 வேலம்பாளையம், ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்று போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், 8 அணிகளாக பிரிந்து, வினாடி - வினா போட்டியில் பங்கேற்றனர்.'ஏ' அணியில் - முனீஸ்வரன், ஸ்ரீவர்ஷினி, 'பி' அணியில் - தேவிகா, சஞ்சீவி, 'சி' அணியில் - சந்திரசேகர், ரிதிகா, 'டி' அணியில் - ரோஷினி, கார்த்திகேயன், 'இ' அணியில் - அஸ்வின், சாஸ்மிதா, 'எப்' அணியில் - ஹேமா வர்தினி, பிரேம்குமார், 'ஜி' அணியில் - வருண், தேவிஸ்ரீ, 'எச்' அணியில் - தீபக்குமார், சாம் டேனியல் ஆகியோர் பங்கேற்றனர்.இதில், 'ஜி' அணியை சேர்ந்த வருண், தேவிஸ்ரீ அதிக புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர். வெற்றி பெற்றவருக்கு பள்ளி பொருளாளர் ஸ்ருதி, முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X