பொது செய்தி

தமிழ்நாடு

'உங்களுக்குள் இருக்கு, கம்ப்யூட்டர் 'சிப்!' இதய நிறைவு தியானத்தால் பயனடையலாம்

Added : நவ 29, 2019
Advertisement

பொங்கலுார்:இதய நிறைவு தியான நிறுவனத்தின், தலைவர், ஸ்ரீ கம்லேஷ் தேசாய் பட்டேல் நேற்று பொங்கலுார் பல்லவராயன் பாளையத்தில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மிஷன் ஆசிரமத்திற்கு வந்தார்.பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், அவர் பேசியதாவது:உயிர் சக்தி நமக்குள் இருக்க வேண்டும். வெளியில் இருந்தாலும் நாம் உணர முடியும். மாணவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கும். எதைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் ஏற்படும்.தியானம் செய்யும்போது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். கல்வி என்பது தகவல்களை சேகரிப்பதாக உள்ளது.தற்போது முன்பை விட அதிக தகவல் கிடைக்கிறது. தகவல் மூளையில் சேமிக்கப் படுகிறது. இதை ஒரு சிப்பில் பதிவு செய்து பொருத்திவிட்டால் அந்த தகவல்களை எப்போது தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ளலாம். அதனால், இவ்வளவு படிக்கத் தேவையில்லை.அதை சிப் பார்த்துக்கொள்ளும். இளமையில் வயது, உடல் ஒத்துழைக்கும். மன அமைதி, சுறுசுறுப்பு இருக்கும். இந்த பருவத்தில் தியானம் செய்யலாம். வயதான பின் செய்யலாம் என்று எண்ணக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.பயிற்சியாளர் லட்சுமணன் பள்ளி மாணவர்களுக்கு, மூளைத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X