சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் மணல் கடத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:தாராபுரத்தில் மணல் கடத்தியது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சகுனிபாளையம் என்ற இடத்தில், சந்தேகப்படும் விதமாக வந்த வேனை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசார் நிற்பதை கண்ட, வேனில் இருந்தவர்கள், வேனை நிறுத்தி விட்டு தப்பியோடினர். அவர்களை போலீசார் பின்தொடர்ந்து செல்ல ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றொருவர் தப்பித்து சென்றார்.இதனால், அந்த நபரை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தாராபுரம் அருகேயுள்ள தாளக்கரையை சேர்ந்த ராஜேஷ் என்பதும், அப்பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் மணலை திருடி வந்தது தெரிந்தது. வேன், ஒரு லோடு மணலை பறிமுதல் செய்து, ராஜேஷ்சை கைது செய்தனர். தப்பியோடிய ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X