அவிநாசி:அவிநாசி அருகே, சேவூரில், தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா, கூல் லிப் உட்பட போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், சதீஷ்குமார் அடங்கிய குழுவினர், சேவூரில் உள்ள மளிகைக்கடை, டீக்கடை, பேக்கரிகளில், நேற்று சோதனை நடத்தினர்.அதில், சில கடைகளில், பான்பராக், குட்கா உட்பட போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆய்வின்போது, கடைகளில், புழக்கத்தில் இருந்த, 40 கிலோ தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர் பறிமுதல் செய்யப்பட்டது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, உணவு பொருட்கள், 10 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டது.