பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றங்கரையில் ஆபத்து தடுப்புச்சுவர் எதிர்பார்ப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் இருந்து சூலக்கல் வழியாக கிணத்துக்கடவு, கோவில்பாளையம், ஜமீன்காளியாபுரம் மற்றும் கிணத்துக்கடவு செல்லும் ரோடுகள் அமைந்துள்ளன.இவற்றில், சூலக்கல் - சென்றாம்பாளையம் செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது. விவசாயிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, ரோடு சீரமைப்பு பணி சமீபத்தில் துவங்கியது.ரோட்டில், மேற்கு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வடக்கிபாளையத்தில் இருந்து சூலக்கல் வழியாக கிணத்துக்கடவு, கோவில்பாளையம், ஜமீன்காளியாபுரம் மற்றும் கிணத்துக்கடவு செல்லும் ரோடுகள் அமைந்துள்ளன.இவற்றில், சூலக்கல் - சென்றாம்பாளையம் செல்லும் ரோடு படுமோசமாக இருந்தது. விவசாயிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, ரோடு சீரமைப்பு பணி சமீபத்தில் துவங்கியது.ரோட்டில், மேற்கு நோக்கி செல்லும் சூலக்கல் ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றின் மேற்கு கரையானது, ரோட்டோரம் அமைந்துள்ளது. ஏறக்குறைய, 100 மீ., நீளப்பாதை ஆற்றங்கரை விளிம்பில் அமைந்துள்ளது. எவ்வித தடுப்பும் இல்லாத நிலையில், வேகமாக செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போதும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ரோட்டின் இரு கரையிலும், தடுப்பு சுவர் அமைத்து, ஆபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X