கழிவுநீரால் சிதையும் ரோடு எல்லை பிரச்னையால் சிக்கல்

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதிகள், விவசாய பண்ணைகளுக்கு செல்லும் ரோட்டில் கழிவுநீரை விடுவதால், படு மோசமாக சிதைந்து கிடக்கிறது.பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் வனத்துறை சோதனைச் சாவடியை அடுத்து, இணைப்பு ரோடு பிரிகிறது. இந்த ரோடு, பல்வேறு குடியிருப்பு பகுதிகள், நகராட்சி குப்பைக்கிடங்கு, தாளக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட, 100க்கும் மேற்பட்ட விவசாய பண்ணைகளை பிரதான ரோட்டுடன் இணைக்கும் வழித்தடமாகும்.குடியிருப்புகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுநீர், மழைநீர் இந்த ரோட்டில் விடப்படுகிறது. இதனால், ரோடு அரிக்கப்பட்டு படு மோசமாக சிதைந்து கிடக்கிறது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி மற்றும் வடக்கு ஒன்றியத்தின் எல்லைப்பகுதியாக இருப்பதாக, கழிவுநீருக்கு வடிகால் அமைப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.நிர்வாக அதிகாரிகள் பேசி, கழிவுநீருக்கு உரிய வடிகால் வசதி செய்து, ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X