பொது செய்தி

தமிழ்நாடு

குழாய் உடைப்பு சரியானது 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : நவ 29, 2019
Advertisement

வால்பாறை:'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை நகரில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு, எட்டு கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை தடுப்பணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை நகரையொட்டியுள்ள நடுமலைரோட்டில், கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது. நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யும் நடவடிக்கை இல்லை. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 14ம் தேதி செய்தி வெளியானது. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, உடைந்த குழாயை மாற்றியமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X