சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு காந்தி ஆசிரமத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 29, 2019
Advertisement

ஆனைமலை:'கோவில் அருகே, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்,' என வலியுறுத்தி, ஆனைமலையில் காந்தி ஆசிரமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆனைமலை மேற்குத்தெரு மதுரை வீரன் கோவில் அருகே, டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி, ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று, மகாத்மா காந்தி ஆசிரமத்தினர் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆசிரமத்தின் நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் தலைமை வகித்தார். வேட்டைக்காரன்புதுார் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த முருகானந்தம், சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'கோவில் அருகே டாஸ்மாக் கடை எதுக்கு,' என்பது போன்ற, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் பேசியதாவது:ஆனைமலை மேற்குத்தெரு மதுரை வீரன் கோவில் அருகே, குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.இங்கு, டாஸ்மாக் அமைக்கப்பட்டால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசாங்கம் காணும் இடமெல்லாம் டாஸ்மாக் கடைகளை திறந்து, சாமானிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது.ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், மக்களுக்கு இடையூறாக ஏராளமான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனைமலை - கோட்டூர் ரோட்டில், நான்கு கி.மீ., தொலைவுக்குள், மூன்று டாஸ்மாக் கடைகள், ரோட்டோரத்தில் உள்ளன.மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X