பொது செய்தி

தமிழ்நாடு

கரிவரதராஜ பெருமாள் கோவிலில்வரும் 6ல் கும்பாபிேஷக விழா

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழாவையொட்டி, யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியான எஸ்.எஸ்.கோவில் வீதியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது.கோவில் கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்டு சில மாதங்களுக்கு முன் பாலாலயம் நடத்தப்பட்டது. வர்ணம் பூசுதல், கோவில் வளாகத்தில் கற்கள் பதித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து, யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கும்பாபிேஷக விழா வரும், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது.வரும், 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு முதல் கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 4ம் தேதி காலை, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 5ம் தேதி காலையில் ஐந்தாம் காலம் மற்றும் மாலையில் ஆறாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம், சாற்றுமுறை, தச தரிசனம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X