பொது செய்தி

தமிழ்நாடு

'பதில் சொல்லுங்க,'நாசா' செல்லுங்க!' வினாடி வினாவில் மாணவிகள் அசத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் நடத்தப்பட்ட, மெகா வினாடி வினா போட்டியில் மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிக்காட்டி அசத்தினர்.'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வா பீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, பள்ளிகளில், 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி நடத்தி வருகிறது.போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' அழைத்துச் செல்லப்படுவார்கள்.கிருஷ்ண வித்யாலயா அதன் ஒரு பகுதியாக நேற்று, திவான்சாபுதுார் ஸ்ரீ கிருஷ்ண வித்யாலயா பள்ளியில், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிக்கு பள்ளி தாளாளர் கலையரசி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை முத்துலட்சுமி, ஆலோசகர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவு எழுத்து தேர்வில், 140 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, அணிக்கு தலா, இரண்டு பேர் என எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். முக்கிய நிகழ்வுகள், புதிய கண்டுபிடிப்புகள், சர்வதேச அளவில் பேசப்படும் செய்திகள் என பல்வேறு பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன.மூன்று சுற்றுக்களாக நடந்த போட்டியில், 'இ' அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவிகள், சாதனாஸ்ரீ, மதுரிதன்யா, கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, போட்டியில் வெற்றி பெற்று அசத்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கி ஆசிரியர்கள் பாராட்டினர்.எம்.எம்.எஸ்., பள்ளிபொள்ளாச்சி அருகே கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றுக்கான போட்டியில், 330 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மதிப்பெண்கள் அதிகம் எடுத்த, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு காலிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர் விஜயலட்சுமி போட்டியை துவக்கி வைத்தார். மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அப்ரீன், அம்ருதாவர்ஷினி வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, முதல்வர் கிரிஜா, துணை முதல்வர் ராஜேஸ்வரி, ஆலோசகர் கார்த்திக்கேயன் ஆகியோர் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X