பொது செய்தி

தமிழ்நாடு

மண் வளத்தை மேம்படுத்தும் உயிர் உரங்கள் இருப்பு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:உயிர் மற்றும் திரவ உரங்களை பயன்படுத்துவதால், ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, மண்வளத்தையும் மேம்படுத்தலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள், ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, அங்கக வேளாண்மையில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வேளாண்முறையில், உயிர் மற்றும் திரவ உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.ரைசோபியம்ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது.தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். பயிறு வகைகளில் வேர் முடிச்சு உருவாவதற்கு தனிப்பட்ட காரணியாக உள்ளது.அசோஸ்பைரில்லம்அசோஸ்பைரில்லம் புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப் பகுதி மற்றும் வேர்தக்கைப் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்த கூடியதாகும்.நீர்ம உயிர் உரங்கள்உயிர் உரங்களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மணிச்சத்தை கரைக்கும் முறைகளின் மூலம் தருகிறது. நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, காய்கறி மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கு இந்த உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது.அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் ஒரு முக்கியமான இடுபொருளாகும். பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், மண் நலத்தை மேம்படுத்துகிறது மற்றும் மண் வளத்தை காக்கிறது. தற்போது கடத்தும் அடிப்படையிலான உட்புகுத்தலாக உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.உடுமலை வட்டார வேளாண்துறையினர் கூறியதாவது:சோளம், மக்காச்சோளம், உளுந்து, தட்டை, கொண்டைக்கடலை மற்றும் தென்னை மரங்களுக்கு, உயிர் உரங்கள் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் ரைசோபியம் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய உரங்கள் பயன்பாட்டை அதிகரிப்பதால், யூரியா, சூப்பர் போன்ற ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்து, மண் வளத்தை மேம்படுத்தலாம். மேலும், விபரங்களுக்கு, வேளாண் அலுவலர்களை விவசாயிகள் அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X