சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடியில் 'குடிமகன்'கள் அட்டகாசம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:வடக்கிபாளையம் அங்கன்வாடி மையத்தில், விடுமுறை நாட்களில், 'குடிமகன்'கள் அட்டகாசம் செய்கின்றனர்.பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில், குழந்தைகள் பராமரிப்புக்காக, இரண்டு அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்படுகின்றன.நடுப்புணி ரோடு அருகே, செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் உள்ளனர். மையத்தில் ஊழியர் மற்றும் உதவியாளர்

பொள்ளாச்சி:வடக்கிபாளையம் அங்கன்வாடி மையத்தில், விடுமுறை நாட்களில், 'குடிமகன்'கள் அட்டகாசம் செய்கின்றனர்.பொள்ளாச்சி வடக்கிபாளையத்தில், குழந்தைகள் பராமரிப்புக்காக, இரண்டு அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்படுகின்றன.நடுப்புணி ரோடு அருகே, செயல்படும் அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் உள்ளனர். மையத்தில் ஊழியர் மற்றும் உதவியாளர் பணியாற்றுகின்றனர்.மையத்தை ஒட்டி, குழந்தைகளுக்கான பொது கழிப்பிடமும் அமைந்துள்ளது. புதராக இருந்த இப்பகுதி சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டது.அங்கன்வாடி மைய விடுமுறை நாட்களில், 'குடிமகன்'கள், பாட்டில்களுடன் மையத்தில் ஆஜராகி, மது அருந்தி அங்கேயே உருளுகின்றனர். காலி மதுபாட்டில்களை உடைத்து சிதற விடுகின்றனர்.குழந்தைகள் கழிப்பிடத்தை நாசப்படுத்தி விடுகின்றனர். இதனை அங்கன்வாடி பணியாளர்கள், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே, குழந்தைகளை அனுமதிக்கின்றனர்.வடக்கு ஒன்றியம் மற்றும் அரசியல் கட்சியினரிடம் பலமுறை விண்ணப்பித்தும், அங்கன்வாடி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.சமீபத்தில் வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற, துணைசபாநாயகரிடம் மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X