பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனாய்வு தேர்வு நான்கு பள்ளிகளில் மையம்

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இடைநிற்றல் இல்லாமல் உயர்கல்வி வரை கற்பதற்கு, மத்திய அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை, அவர்களின் உயர்கல்வி முடியும் வரை மாதம் 500 ரூபாய் வீதம், வங்கி கணக்கில் அரசு செலுத்துகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, டிச., 1ம் தேதி நடக்கிறது. உடுமலை, கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டுபெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், மொத்தமாக, 759 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை இரண்டு பிரிவாக நடக்கிறது. மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் பாடப்பிரிவு தொடர்பான தேர்வு என, இரண்டு பிரிவுகளாக இத்தேர்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X