சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி பஸ்-லாரி நேருக்குநேர் மோதல்: பரிதாப விபத்து; 10 பேர் படுகாயம்

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, ஆம்னி பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 10 பேர் படுகாயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து கோவை நோக்கி, பி.ஓய்.,01 சி.எச்.,4884 எண்ணுள்ள, ஆம்னி பஸ், கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, உடுமலை ராகல்பாவி பிரிவு அருகே வந்த போது, சோயா ஏற்றிக்கொண்டு, தேனி மாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்த, லாரி (டி.என்.,57 எக்ஸ் 0333), நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், பஸ் டிரைவர், ராமநாதபுரம், திருவாடனையை சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன்,20, பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தை சேர்ந்த, லாரி டிரைவர், ஆறுமுகம், 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த, காரைக்குடியை சேர்ந்த, பழனியப்பன்,41, பொள்ளாச்சி, லோகநாதன்,39, செந்தில்நாதன்,55, கோவையை சேர்ந்த கருப்பையா,28, லோகேஸ்வரன்,18, கமலாராணி,52, ராஜேஸ்,25, மாலதி ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.டிவைடரால் விபத்துதிண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. போலீஸ் சோதனை மற்றும் வேகத்தை குறைக்க, ரோட்டின் மத்தியில் டிவைடர் வைத்துள்ளனர். ரிப்ளெக்டர் உள்ளிட்ட எந்த எச்சரிக்கையும் இல்லாத நிலையில், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள், டிவைடர் உள்ளது தெரியாமல், விபத்து ஏற்படுகிறது. இச்சம்பவமும், டிவைடர் தெரியாமல், எதிர், எதிரே வந்து வாகனங்கள் மோதிக்கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X