சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை மறியல் போலீஸ் சமரசம்

Added : நவ 29, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை நகராட்சி வார்டுகளில், வளர்ச்சிப்பணிகள் நடக்கின்றன. குறிப்பாக, தடுப்புச்சுவர் பணிக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், வார்டுகளில் மக்களுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதியும் நகராட்சி சார்பில் செய்யவில்லை.இந்நிலையில், வால்பாறை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். கோரிக்கை குறித்து நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக மனு கொடுக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X