சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிப்பர்' லாரிகள் சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அடுத்த ஒடையகுளம் அருகே, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனைமலை அடுத்த ஒடையகுளம் அருகே நேற்று, அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'டிப்பர்' லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மக்கள் கூறுகையில், 'அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் ஏராளமான

ஆனைமலை:ஆனைமலை அடுத்த ஒடையகுளம் அருகே, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனைமலை அடுத்த ஒடையகுளம் அருகே நேற்று, அதிக பாரத்துடன் கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 'டிப்பர்' லாரிகளை மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மக்கள் கூறுகையில், 'அதிக பாரம் ஏற்றிக்கொண்டு தினமும் ஏராளமான லாரிகளில், ஜல்லிக்கற்கள், சைஸ் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அதிவேகத்தில் செல்லும் லாரிகளால், விபத்துக்கள் ஏற்படுகிறது. கனிம வளங்கள் கொள்ளையை தடுத்து லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.ஆனைமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சமரச பேச்சு நடத்தினர். தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். போக்குவரத்து பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து, லாரிகளை விடுவித்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X