பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் குப்பை தொட்டி

Added : நவ 29, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை மற்றும் கிராமங்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்கப்படுகின்றன.தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகம் இல்லாததால், பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.வார்டு உறுப்பினர்கள் இருந்தால், தங்கள் கிராமத்துக்கு குப்பைத் தொட்டிகளை வைக்கும்படி மன்றக் கூட்டத்தில் கோரிக்கை வைப்பர். ஆனால் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், அந்தந்த ஊராட்சியின் செயலர், எந்தெந்த கிராமத்துக்கு எத்தனை குப்பைத் தொட்டிகள் வைப்பது என, முடிவு செய்து, வைத்து வருகின்றனர்.ஆனால், சிறுமுகையை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பைத் தொட்டிகளை, கிராமங்களில் வைக்காமல் கடந்த ஒரு ஆண்டாக, அலுவலகம் அருகே வீணாக வைத்துள்ளனர். இதனால் தொட்டிகள் பயன்படுத்தாமலேயே துருப்பிடித்து வீணாகி வருகின்றன. கிராமங்களில், குப்பைத் தொட்டி இல்லாததால், சாலையோரங்களில் குப்பை கொட்டப்படுகிறது. சுகாதாரம் பாதித்துள்ளது.ஊராட்சி செயலரிடம் கேட்ட போது, 'முதல் கட்டமாக வந்த குப்பைத் தொட்டிகள், அனைத்து கிராமங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக வந்த குப்பைத் தொட்டிகளை, விரைவில் வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X