பள்ளியில் ஆண்டு விழா

Added : நவ 29, 2019
Advertisement

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்த மேல்நிலை பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் சுவாமி நிர்மலேஷனந்தர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் பரமசிவம் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், சிறப்பு விருந்தினராக காசா கிராண்ட் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் பேசினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடந்தது. முதுகலை ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.அக்னி அணி சாம்பியன்சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பழனிசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டெறிதல், நீளம், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், யோகா, பரதம், குழுபயிற்சி உள்பட தடகள போட்டிகள் நடந்தன. இதில் சரண்காந்த், பூமிகா, அருண், ஸ்ரீஜா, சுனில், ப்ரகதி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.சிறந்த அணிவகுப்புக்கான பரிசை ஆகாஷ் அணி பெற்றது. போட்டிகளில், 214 புள்ளிகள் எடுத்து, அக்னி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அறிவியல் கண்காட்சிதுடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி, நாயர்ஸ் வித்யா மந்திர் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. தாளாளர் விஜயகுமாரி துவக்கி வைத்தார். செயலாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், பள்ளி இயக்குனர் மதன்குமார் பேசுகையில், ''குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, அறிவியல் பூர்வமாக பதில் அளிக்க பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் சிந்தனைத் திறன் மேம்படும்,'' என்றார்.வேளாண்மை, எளிய அறிவியல் உண்மைகள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை தொடர்பான மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கண்காட்சியில், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.தர வரிசையில் இடம்அண்ணா பல்கலை தேர்வுகளில், தரவரிசை பட்டியல் இடம் பெற்ற, ஆறு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆர்.வி.எஸ்., தொழில்நுட்ப வளாகத்தில், பி.இ., வேளாண் பொறியியல் துறையில் படிக்கும் ஆனந்த அமிர்தினி, அனுசுயா, ஆதிரா, அஜித்குமார் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் பயிலும் அகிலா, அபுபக்கர் அப்ரீடி ஆகியோர் அண்ணா பல்கலை தேர்வுகளில், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களை, கல்லுாரி இயக்குனர், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X