பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.8 பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர் சங்கம் பங்கேற்க தீர்மானம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
சிவகங்கை: புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, ஜன.,8 ல் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதென சிவகங்கையில் நடந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்தனர்.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு புரட்சிதம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானம் வாசித்தார்.

சிவகங்கை: புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி, ஜன.,8 ல் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதென சிவகங்கையில் நடந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்தனர்.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு புரட்சிதம்பி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானம் வாசித்தார். மாநில பொதுக்குழு ஆரோக்கியராஜ், சிங்கராயர், மாவட்டப் பொருளாளர் குமரேசன் பங்கேற்றனர்.தீர்மானம்: மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கும் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். 'எமிஸ்' பணிகளை மேற்கொள்ள வட்டார அளவில் தனி அலுவலர் நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி டிச.,3 மற்றும் 5 ல் ஆசிரியர் சந்திப்பு, வட்டார அளவில் முறையீடு நடத்துவது. ஜன.,4 ல் மாவட்ட தலைநகரில் தர்ணா செய்வது. டிச.,22 ல் காளையார்கோவிலில் முப்பெரும் விழா நடத்துவது. புதிய பென்ஷன் திட்டம் கைவிடுதல், தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஜன.,8 ல் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில், இச்சங்கமும் பங்கேற்பது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X