பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும்! 'டெண்டர்' விட விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:விவசாயிகள், விளை பொருட்களையும், மக்கள் தங்கள் வாகனங்களையும் பாதுகாப்பாக கொண்டு செல்ல, பரிசல் பயணத்துக்கு அனுமதியளித்து; டெண்டர் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பவானி சாகர் அணையின் நீர் மட்டம், 105 அடியாக இருப்பதால், சிறுமுகையை அடுத்த ஆலாங் கொம்பு வரை, பவானி ஆற்றில், தண்ணீர் தேங்கியுள்ளது.கோத்தகிரி மலையிலிருந்து வரும் தண்ணீர், காந்தையாற்றின் வழியாக பவானி ஆற்றில் சேர்கிறது. காந்தையாறு, பவானி ஆற்றின் கிளை ஆறு என்பதால், காந்தையாற்றின் குறுக்கே கட்டிய உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதனால், காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய பழங்குடியின மக்களும், லிங்காபுரம், சிறுமுகை ஆகிய பகுதி விவசாயிகளும் பரிசல்கள் மூலம் ஆற்றை கடந்து வந்தனர்.கோவை மாவட்ட நிர்வாகம், மோட்டாரில் இயங்கும் போட்டை கொடுத்து, பள்ளி குழந்தைகள், பொதுமக்களை இலவசமாக ஏற்றி வரச் செய்துள்ளது. ஆனால், பொது மக்களின் வாகனங்களையும், விவசாய விளைபொருட்களையும் கொண்டுவர வழி இல்லை.இதற்காக சிலர், பாதுகாப்பற்ற முறையில், சிறிய பரிசல்களை இயக்குகின்றனர். இந்நிலையில், இரு விவசாயிகள் பிளாஸ்டிக் டிரம்களை கொண்டு, மோட்டார் மூலம் இயங்கும், பெரிய 'போட்' போன்ற ஒரு தெப்பத்தை தயாரித்துள்ளனர்.அதில், பொதுமக்களின் வாகனங்கள், விவசாய விளை பொருட்களை ஏற்றிவர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பெரிய போட் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். மேலும், பெரிய போட் வைத்துள்ளவர்களுக்கும், சிறிய பரிசல் வைத்துள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.அதனால், 'பேரூராட்சி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காந்தையாற்றில் பரிசல்களை இயக்க டெண்டர் விட்டது போல், இப்போதும், டெண்டர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பொது மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X