பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனையில் சூடு பிடிக்கும் நூல் ரகம்: விலை உயர்வால் உற்பத்தியாளர்கள் உற்சாகம்

Added : நவ 29, 2019
Advertisement

சோமனுார்:சோமனுார் பகுதியில், மார்க்கெட் சூடு பிடித்து, நுால் ரகங்கள் விலை ஏற்றம் அடைந்துள்ளதால், ஜவுளித்துறையினர் உற்சாகமடைந்து உள்ளனர்.கோவை- மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 1,500க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மற்றும் ஓ.இ., மில்களும், நுாற்றுக்கும் மேற்பட்ட சைசிங் மில்களும் செயல்படுகின்றன.ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நாடா இல்லாத தறி உரிமையாளர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இங்கு உற்பத்தி செய்யப்படும் நுால் மற்றும் துணி ரகங்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக, நுால் மற்றும் துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்ததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையில் மூழ்கியிருந்தனர்.நுால் மற்றும் துணி ரகங்கள் தேங்கியிருந்தன. தீபாவளி பண்டிகை முடிந்தபின், மார்க்கெட் சூடு பிடிக்கும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.அதற்கேற்றாற் போல், கடந்த ஒரு வாரமாக நுால் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. 30 ரக வார்ப் நுால், 50 கிலோ மூட்டை ரூ.9,100க்கும், 36 ரக நுால், ரூ.9,600க்கும், 40 ரக நுால், ரூ.10 ஆயிரத்துக்கும், 60 ரக நுால், ரூ. 12,500க்கும் விற்பனையாகிறது.வார்ப் ரக நுால்கள் கிலோவுக்கு ரூ.10 முதல், ரூ.15 வரை விலை உயர்ந்துள்ளது. அதேபோல், 40 ரக வெப்ட் நுால், ரூ.9,700க்கும், 60 ரக நுால், ரூ.11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கிலோவுக்கு, ரூ.5 முதல் 7 வரை உயர்ந்துள்ளதால் மில் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.'அட்வான்ஸ் புக்கிங்'மில் உரிமையாளர்கள் கூறியதாவது:மந்தமாக இருந்த நுால் மார்க்கெட் கடந்த ஒரு வாரமாக சூடு பிடித்துள்ளது. அனைத்து நுால் ரகங்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வடமாநிலங்களுக்கு அதிக அளவு நுால் ரகங்கள் செல்கின்றன.'அட்வான்ஸ் புக்கிங்' செய்யும் அளவுக்கு மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. துணி ரகங்களுக்கும் விலை கிடைத்தால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஓ.இ., ரகங்களுக்கும்!கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தியாகும், 25 ரக வெப்ட் நுால் ரகம், 50 கிலோ மூட்டை, ரூ.6,200க்கும், 30 ரகம், ரூ.7,200க்கும் விற்பனையாகிறது. இதனால், ஓ.இ., மில் உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X