சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாறுமாறாக ஆம்புலன்ஸ் ஓட்டிய போதை டிரைவருக்கு தர்மஅடி

Added : நவ 29, 2019
Advertisement

சோமனுார்;சோமனுாரில் தாறுமாறாக இயக்கப்பட்ட ஆம்புலன்ஸ் தலைகீழாக கவிழ்ந்தது. போதையில் இருந்த டிரைவருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.சோமனுார், கருமத்தம்பட்டியில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊட்டியை சேர்ந்த நித்தீஷ் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ்சை, கருமத்தம்பட்டியை சேர்ந்த பிரபு, 25, என்பவர் ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, ஆம்புலன்ஸ் சைரனுடன் சோமனுாரில் இருந்து கருமத்தம்பட்டி நோக்கி வந்தது. போதையில் இருந்த டிரைவர் பிரபு வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.சாலை தடுப்பு மற்றும் நின்று கொண்டிருந்த சில வாகனங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியது. தொடர்ந்து, வேகமாக சென்று கருமத்தம்பட்டி அருகே தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து, டிரைவரை சரமாரியாக தாக்கி, கருமத்தம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X