பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் நடவு செய்ய

Added : நவ 29, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில், 3,000 பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.சிறுமுகையை அடுத்த அன்னுார் சாலையில் பெள்ளேபாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், 15க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், மூன்று குட்டைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் உள்ளன. நீர்நிலைகள் உள்ள பகுதிகளில், ஊராட்சி நிர்வாகம் பனை விதைகளை நடவு செய்ய உள்ளது.பெள்ளேபாளையம் ஊராட்சி செயலர் அர்ச்சுனன் கூறுகையில், ''காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இந்த ஊராட்சிக்கு, 3,000 பனை விதைகளை கொடுத்தது. இந்த விதைகளை, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குமரன் குன்று, சென்னம்பாளையம், பள்ளேபாளையம் ஆகிய மூன்று குட்டைகளிலும், ஐந்து தடுப்பணைகளிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் நடவு செய்யப்பட உள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X