கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்

Added : நவ 29, 2019

மானாமதுரை: கார்த்திகைக்கு இல்லங்களில் ஒளிவீச மானாமதுரையில் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு செல்வதால், மண்ணுக்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது.கார்த்திகை அன்று வீடு, கோயில், வர்த்தக நிறுவனங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு நடத்துவர். இதற்காக மானாமதுரையில் ஆண்டுதோறும் மண் விளக்குகள் தயாரித்து மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இங்கு அகல், சரம், அணையா விளக்குகள், துளசி மாடம், குருவாயூர் செட் விளக்கு, 5 முக குருவாயூர் விளக்கு, சிட்டி விளக்குகள்,தேங்காய் முகவிளக்கு, சுவாமி வடிவ விளக்குகள் தயாரிக்கின்றனர்.விளக்கு தயாரிக்கும் நாகம்மாள் கூறியதாவது, டிச.,10ல் நடக்க உள்ள கார்த்திகை விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர் வந்துள்ளன. அடிக்கடி மழை பெய்வதால் உரிய நேரத்திற்குள் விளக்குகள் தயாரித்து கொடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மழையையும் பொருட்படுத்தாமல் விளக்குகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X