பொது செய்தி

தமிழ்நாடு

கவுண்டம்பாளையத்தில் வேலைவாய்ப்பு திருவிழா

Added : நவ 29, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு திருவிழா இன்று காலை, 10.00 மணிக்கு நடக்கிறது.இங்கு வாரந்தோறும், வெள்ளிக்கிழமை வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போர் சந்திக்கும் தனியார் வேலைவாய்ப்பு திருவிழா நடக்கிறது. இதில், படிக்காதவர்கள் முதல் எம்.பி.ஏ., படித்தவர்கள், தொழிற்கல்வி பயின்றவர்கள், அக்கவுன்டண்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளலாம்.இம்முகாமில் கலந்து கொள்பவர்கள், யாருக்கும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வேலை அளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இம்முகாமில் நேரடியாக கலந்து கொண்டு, வேலை தேடி வருவோரின் கல்வித்தகுதி, அனுபவம், எதிர்பார்க்கும் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் நபர்களை தேர்வு செய்து, அதே இடத்தில் வேலை நியமன ஆணையையும் வழங்குகின்றனர்.இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்றாலும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட்டு இருக்கும் பதிவின் மூப்பு எவ்விதத்தில் பாதிக்காது. முகாம் காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X