பெ.நா.பாளையம்;கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, கோவை தேயிலை ஏல மையத்தில், வாரந்தோறும் இணையதளம் வாயிலாக தேயிலை ஏலம் நடக்கும். இந்த வாரம் நடந்த தேயிலைத்துாள் ஏலத்துக்கு, இரண்டு லட்சத்து, 71 ஆயிரத்து, 15 ஆயிரம் கிலோ தேயிலைத்துாள் வந்தது. அதில், ஒரு லட்சத்து, 90 ஆயிரத்து, 427 கிலோ தேயிலைத்துாள் ஏலம் போனது. இது, 70 சதவீதமாகும். இவ்வார சராசரி ஏலமதிப்பு ஒரு கிலோவுக்கு, 96 ரூபாய், 44 காசுகளாக இருந்தது.இலைரகம், 1.75 லட்சம் கிலோ வந்தது. இதில், 88 ஆயிரம் கிலோ ஏலம் போனது.