பொது செய்தி

தமிழ்நாடு

கானாடுகாத்தான் மு.சித.மு.சிதம்பரம் செட்டியார் பள்ளியில் வினாடி வினா

Added : நவ 29, 2019
Advertisement

காரைக்குடி: தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில்மாணவர்களுக்கான 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடிவினா போட்டி, கானாடுகாத்தான் மு.சித.மு.சிதம்பரம் செட்டியார்மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ், 'பட்டம்' மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொதுஅறிவை வளர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினாபோட்டி நடத்தப்படுகிறது. அதன்படி கானாடு காத்தான் மு.சித.மு.சிதம்பரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குமுதற்கட்டமாக எழுத்து தேர்வு போட்டி நடந்தது.இதில், 16 மாணவர்களை ஆசிரியர் குழுவினர்தேர்வு செய்தனர். இவர்கள் 'ஏ' முதல் 'எச்' வரை 8 பிரிவு களாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கான 2 ம் நிலை தேர்வான வினாடி வினா போட்டி நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ராமர், முத்துராமலிங்கம், அருணாதேவி ஆகியோர் போட்டியை நடத்தினர். இதில் 'எச்' பிரிவை சேர்ந்த ஜி.நந்தினி, கே.ஹரிஷ்ராகவன் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற, பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றினை பள்ளி செயலர் சி.டி.,மெய்யப்பன், தலைமை ஆசிரியர் எம்.சிதம்பரம் ஆகியோர் வழங்கினர்.வினாடி வினாவில் பங்கேற்றவர்கள்6ஆம் வகுப்பு: கே.ஹரிஸ்ராகவன்8 ஆம் வகுப்பு: ஜே. வைரம்.கிஷோர், பி.ஹரிஸ்ராகவன்,டி.யோகேஸ்வரன், என்.ரிதுஅன்னபூரணி10 ஆம் வகுப்பு: ஜி.நந்தினி, எஸ்.நாகவர்த்தினி, எஸ்.அபிநயா, எம்.பாலமுருகன்11 ஆம் வகுப்பு: எஸ்.ஈஸ்வரி, சி.ஐஸ்வர்யா, எஸ்.வளர்மதிபிளஸ் 2: எம்.கஸ்துாரி, எம்.ஜனோபர் நிஷா, எஸ்.கவிதா, சி.சுப்புலட்சுமி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X