பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை: சிங்கம்புணரி பகுதி பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்ககோரி, திருப்புத்துார் எம்.எல்.ஏ., பெரியகருப்பன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.திருப்புத்துார், சிங்கம்புணரிக்கு குடிநீர், விவசாய தேவைக்காக பெரியாறு பாசன நீர் கொண்டு வர 1978 ல் நீட்டிப்பு கால்வாய் கட்டப்பட்டது. மதுரை மாவட்டம், புலிப்பட்டி பிரிவில் இருந்து இக்கால்வாய் அமைத்தனர். பெரியாறு நீரை நம்பி 400 கண்மாய் பாசனத்தை சேர்ந்த 13 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் பலன் அடைந்து வந்தனர். இக்கால்வாயில் மூன்று முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நீர் முறையாக வந்து சேரவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு பாசனத்திற்கென பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பெரியகருப்பன் எம்.எல்.ஏ.,தலைமையில், விவசாயிகள் சங்க தலைவர் அருணகிரி ஆகியோர் உட்பட விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், குடிநீர், விவசாய தேவைக்காக பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் 30 நாட்களுக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X