பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் சமுதாயக் கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சி, மத்தம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பில், ரூ.70 லட்சம் மதிப்பில், சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது.இதற்கான பூமி பூஜை நடந்தது. விழாவுக்கு, பி.டி.ஓ., அனிதா முன்னிலை வகித்தார். கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ் ஆகியோர் தலைமை வகித்து, பணிகளைத் தொடக்கி வைத்தனர்.