குறைந்தழுத்த மின்வினியோகம் 300 குடும்பங்கள் பாதிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை: சிவகங்கை அருகே குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் இலுப்பக்குடி, அரசனிபட்டி கிராமத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இலுப்பக்குடியில் கடந்த 40 ஆண்டுக்கு முன் அமைத்த மின் டிரான்ஸ்பார்மர் மூலம் இரு கிராமத்திற்கும் மின் வினியோகம் நடக்கிறது. இவ்விரு குடும்பத்தில் உள்ள வீடுகளுக்கு குறைந்தழுத்த மின்வினியோகம் நடக்கிறது. இதனால், பெண்கள் வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் மின்மோட்டார்கள் ஓடாததால் தண்ணீர் பிரச்னையில் தவிக்கின்றனர். இரவில் வீடுகளில் படிக்க முடியாமல் மாணவர்கள், தெருவிளக்குகள் எரியாமல் விஷச்சந்துகளின் அச்சத்தில் உள்ளனர். மின்வாரிய நிர்வாகம் இங்கு புதிய மின் டிரான்ஸ்பார்மர் ஏற்படுத்தி தடையின்றி மின்சப்ளை செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X