பொது செய்தி

தமிழ்நாடு

மலேசியாவில் முதியோர் தடகளம்

Added : நவ 29, 2019
Advertisement

காரைக்குடி: மலேசியாவில் நடக்க உள்ள ஆசிய தடகளப்போட்டியில் பங்கேற்க காரைக்குடியில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தோர் தீவிர தடகள பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிச.,2ம் தேதி முதியோர் தடகள போட்டி மலேசியாவில் நடக்க உள்ளது. இதில் பங்கு பெற காரைக்குடியை சேர்ந்த பொசலான் 76, வேலுச்சாமி 72, கோவிந்தன் 79, ஆகிய மூவரும் தேர்வாகியுள்ளனர். ஏற்கனவே மாநில, தேசிய, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளனர். இருப்பினும் தங்களுக்கு அரசு சார்பில் உதவியோ, ஊக்கமோ கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.* பொசலான் கூறியதாவது: ஆசிய விளையாட்டில் 9 முறை, உலகளவில் ஒரு போட்டியில் பங்கேற்றுள்ளேன். ஆறு தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளேன். போபாலில் நடந்த மும்முறை தாண்டுதலில் இந்திய அளவில் சாதனை படைத்தேன். 46 வயதில் இருந்தே விளையாடுகிறேன். மலேசியாவில் நடக்கும் போட்டியில் 75 முதல் 80 வயது பிரிவில் நீளம், மும்முறை தாண்டுதல், 100 மீ., ஓட்டம், 80 மீ தடை தாண்டுதலில் பங்கேற்க உள்ளேன்.* கோவிந்தன் கூறியதாவது: சிங்கம்புணரியை சேர்ந்த நான் 20 தங்கம், 3 வெள்ளி, 35 சான்றுகள் பெற்றுள்ளேன். 6 முறை மாநில, 4 முறை மாவட்ட அளவில், ஒரு முறை ஆசிய போட்டியில் பங்கேற்றேன்.டிசம்பரில் ஆயிரத்து 500, 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளேன். அரசிடமிருந்து எந்த அங்கீகாரமோ, ஊக்கமோ கிடைக்கவில்லை.* வேலுச்சாமி கூறியதாவது: இது வரை 6 தங்கம், 4 வெள்ளி பெற்றுள்ளேன்.ஆசிய போட்டியில் 200, 400, ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கிறேன், என்றனர். ஆசிய தடகளப்போட்டியில் பங்கேற்க உள்ள மூவருக்கும், அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுரியில் பாராட்டு விழா நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X