உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.,வில் நேர்காணல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.,வில் நேர்காணல்

Added : நவ 29, 2019

திருப்புத்துார்: மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் இன்று துவங்குகிறது, என மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நகராட்சி, பேருராட்சி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு விருப்பமனு கொடுத்தோருக்கான நேர்காணல் நவ.,29 மற்றும் 30ல் நடக்கிறது. விருப்பமனு கொடுத்தவர்கள் நேரில் பங்கேற்கவும். இன்று (நவ.29) மானாமதுரை சாந்தி முருகன் திருமண மண்டபத்தில் காலை 10:00 மணிக்கும், சிவகங்கை கற்பூர சத்தியசீமான் மகாலில் மாலை 3:30 மணிக்கும் நடக்கிறது. நவ.,30 அன்று காரைக்குடி தி.மு.க., கட்சி அலுவலகத்தில் காலை 10:00 மணிக்கும், திருப்புத்துாரில் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பகல் 3:30 மணிக்கு நடக்கிறது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X