சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Added : நவ 29, 2019
Advertisement

தேவகோட்டை: -தேவகோட்டை அருகே நாச்சியார்புரம் ஆறுமுகம் மகன் சோனைமுத்து 27. இவர் மீது 2016 ல் பள்ளி மாணவியை கடத்தி கொலை செய்த வழக்கு, 2018 மே மாதம் பணப்பிரச்னையால் தன் தந்தை ஆறுமுகம், அக்., 8ம் தேதி அதே பிரச்னைக்காக தாய் செல்லாயி ஆகிய இருவரையும் கொலை செய்து, இயற்கை மரணம் போல் கிராமத்தினரை நம்ப செய்து அடக்கம் செய்தார். இதையடுத்து தேவகோட்டை போலீசார் அடக்கம் செய்த இரு உடலையும் தோண்டி எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சோனைமுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, சிவகங்கை எஸ்.பி.,ரோஹித்நாதன், கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவுபடி, சிறையில் உள்ள சோனைமுத்துவிடம், தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை, அதற்கான உத்தரவை வழங்கினார்.மாவட்ட அளவில் நவம்பர் வரை குண்டாசில் 37 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X