பொது செய்தி

தமிழ்நாடு

மனநலம் நன்றாக இருந்தால் தான் பணியில் கவனம் செலுத்த முடியும்

Added : நவ 29, 2019
Advertisement

சிவகங்கை: மனநலம் நன்றாக இருந்தால் தான் பணியில் கவனம் செலுத்த முடியும்,'' என சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்த மருத்துவ முகாமில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் பேசினார்.மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய பிரச்னை குறித்து சிகிச்சை அளித்தனர். மேலும், நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சை அளித்தனர். முகாமை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது, அனைவரும் மனஅழுத்தமின்றி செயல்பட வேண்டும். மனநலம் நன்றாக இருந்தால் தான் பணியில் கவனம் செலுத்த முடியும். இப்புதிய நீதிமன்ற கட்டட வளாகத்தில் முதன்முறையாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடக்கிறது, என்றார்.கூடுதல் மாவட்ட நீதிபதி ரபி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செம்மல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தமிழரசி, தலைமை குற்றவியல் நீதிபதி பாபுலால், சட்டப்பணிகள் ஆணைய செயலர் நீதிபதி ராஜேஸ்வரி, மாஜிஸ்திரேட் பாரததேவி பங்கேற்றனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கலாதேவி தலைமையில் டாக்டர்கள் அரவிந் ஆதவன், சித்தா டாக்டர் பிரபாகரன், உதயசூரியன், காந்திநாதன் சிகிச்சை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X