பொது செய்தி

தமிழ்நாடு

சிவப்பு, மஞ்சள் பூச்சிக்கொல்லி நீலகிரியில் விரைவில் தடை

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஊட்டி:'நச்சுத்தன்மை அதிகமுள்ள சிவப்பு, மஞ்சள் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, நீலகிரியில் விரைவில் தடை விதிக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரியில், ஆண்டு தோறும், 18 ஆயிரம் ஏக்கர்பரப்பில், மூன்று போகத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. மலை காய்கறி தோட்டங்களில் இயற்கை உரத்தை தவிர்த்து, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு அதிகரித்து வருவதால்,

ஊட்டி:'நச்சுத்தன்மை அதிகமுள்ள சிவப்பு, மஞ்சள் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, நீலகிரியில் விரைவில் தடை விதிக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரியில், ஆண்டு தோறும், 18 ஆயிரம் ஏக்கர்பரப்பில், மூன்று போகத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. மலை காய்கறி தோட்டங்களில் இயற்கை உரத்தை தவிர்த்து, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு அதிகரித்து வருவதால், நிலம் நச்சுத் தன்மையாகி பாதிக்கப்பட்டதுடன், விவசாயிகள் மற்றும் மக்களுக்கும் பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது.இதைத் தொடர்ந்து, பூச்சிக் கொல்லி மருந்துகளை ஒழித்து, இயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்த, 2018ம் ஆண்டு செப்., 1 முதல், நீலகிரி இயற்கை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து விவசாயிகள்மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும், சிவப்பு, மஞ்சள் பூச்சிக்கொல்லி மருந்துகளில் நச்சுத்தன்மை அதிகரிப்பால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மருந்துகளுக்கு தடை விதிக்க, மாவட்ட கலெக்டர் தலைமையிலான, இயற்கை விவசாய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''நீலகிரி இயற்கை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டு களில், மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ''அதிக நச்சுத்தன்மை கொண்ட சிவப்பு, மஞ்சள் பூச்சி கொல்லி மருந்துகளுக்கு விரைவில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X