சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்லாத நோட்டு வைத்திருந்தமூதாட்டிகளிடம் விசாரணை

Added : நவ 29, 2019
Advertisement

பல்லடம்:மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளிடம், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பூமலுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள், 75 மற்றும் அவரது தங்கை தங்கம்மாள், 70. இருவருக்கும் தலா, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு, திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.சகோதரிகள் இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், மருத்துவ செலவுக்காக, சேர்த்து வைத்திருந்த பணத்தை, தங்களது மகன்களிடம் கொடுத்தனர். அதை பார்த்த மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், மொத்தமுள்ள, 46 ஆயிரம் ரூபாயும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட செய்யப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் என்பதுதான். தாங்கள் சேமித்த பணம் செல்லாமல் போனது குறித்து, மூதாட்டிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.இதையறிந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், சம்பந்தப்பட்ட மூதாட்டிகளிடம், விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். அதன்படி, பல்லடம் வருவாய் துறையினர், மூதாட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், மூதாட்டிகளுக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு, பழைய ரூபாய் நோட்டு ஆகியன குறித்து, விசாரிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X