வெள்ளகோவில்:இருசக்கர வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற வீடியோ, 'வைரல்' ஆனதையடுத்து, போலீஸ்காரரை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவிட்டார்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த, குருக்கத்தி அருகே, போலீஸ் செக்போஸ்ட் உள்ளது. அக்., 26ம் தேதி, அங்கு பணியாற்றிய போலீஸ்காரர் இருளாண்டி, தாராபுரத்தில் இருந்து, பைக்கில் வந்த ஒருவரிடம் லஞ்சம் பெற்றுள்ளார். உடன் வந்த நண்பர், இதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இது வைரலானது.விசாரணையில், லஞ்சம்பெற்றது உறுதியானதையடுத்து, மாவட்ட எஸ்.பி., திஷா மிட்டல், காவலர் இருளாண்டியை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த ஆண்டு, ஆயுதப்படையில் இருந்து மாற்றப்பட்டு, வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் இவர், பணியில் சேர்ந்தார். இவரது சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம், கோவிந்தாபுரம்.