சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரியிடம் பணம் பறிப்பு: 'போலி' போலீஸ் கைது

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:போலீஸ் எனக் கூறி, மளிகை வியாபாரியிடம் பணம் பறித்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் அடுத்த, 15 வேலம்பாளையம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ரூடா ராம் சவுத்ரி, 21. ஓடக்காடு பகுதியில் மளிகைப்பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். அனுப்பர்பாளையம் புதுாரில் குடோன் உள்ளது.கடந்த 25ம் தேதி, குடோனுக்கு பைக்கில் வந்த ஆறு பேர், ரூடா ராம் சவுத்ரியிடம், உளவுத்துறை போலீசார் என கூறி, 'கடையில் புகையிலை பொருட்கள் மறைமுக விற்பனை நடக்கிறது. உங்களை கைது செய்யாமல் இருக்க, ஐந்து லட்சம் ரூபாய் பணம் வேண்டும்' என மிரட்டி உள்ளனர்.ரூடா ராம் சவுத்ரி, அவர்களிடம், 3.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, முதல் தவணையாக, மூன்று லட்சம் ரூபாயை கொடுத்தார். இருப்பினும், மிரட்டியவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், உளவுத்துறை போலீசார் இச்செயலில் ஈடுபடவில்லை என தெரியவந்தது.இதற்கிடையே, போலீஸ் ஆலோசனைப்படி, மீதி பணத்தை வாங்க, பெரியார் காலனிக்கு வரும்படி, ரூடா ராம் சவுத்ரி, மிரட்டல் கும்பலிடம் கூறி உள்ளார். இதை நம்பி, அங்கு வந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து, மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கைதானவர்கள், திருப்பூர், அம்மாபாளையம் கணபதி நகரை சேர்ந்த சையது இப்ராஹிம், 44; கே.பி.என். காலனி முதல் வீதியை சேர்ந்த முகமது அனிபா, 47; காங்கயம் ரோடு டிமாண்ட் வீதியை சேர்ந்த சாதிக் அலி, 42 என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கோவையை சேர்ந்த பாபு, ரகமதுல்லா, அஷ்ரப் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X