கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பாலும், முறையாக கழிவு நீரை பம்பிங் செய்யாமல் நகராட்சி அதிகாரிகள் குறட்டை விடுவதாலும் ரோடுகளில் ஆறாக பாயும் கழிவு நீரால் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. தெருக்களில் தொட்டிகள் அமைத்து வீடுகளில் உள்ள கழிவு நீர் அதில் சேகரிக்கப்படும் பின் அங்கிருந்து தினசரி மோட்டார் மூலம் பம்பிங் செய்து சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தியதால் தெருக்கள், சாலையோரங்களில் கழிவு நீர் வாய்க்கால்கள் துார்ந்து போனது. இதனால் சேதம் அடைந்த மேன்ஹோல் பகுதி வழியாக மழை நீரும் பாதாள சாக்கடை தொட்டிக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை நிரம்பி மேன் ேஹால்கள் வழியாக ரோட்டில் வெளியேறுகிறது. மழை நீரும், கழிவு நீரும் கலந்து பொது மக்கள் பயன்படுத்தும் ஊரணிகள், குளங்களுக்கு செல்கிறது.இந்த நீரில் குளிக்கும் மக்களுக்கு உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் வடக்கு தெருவில் இருந்து முதுநாள் செல்லும் வழியில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவு நீர் வெளியேறி முகவையூரணிக்கு செல்கிறது. வண்டிக்கார தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் தெருவில் ஆறாக ஓடுகிறது. தினமலர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து மேன்ேஹால் வழியாக வெளியேறுகிறது.ராமநாதபுரம் சிவன்கோயில் தெருவில் கழிவு நீர் தெருவில் வழிந்தோடுகிறது. சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் குறந்டை விடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பக்தர்கள், பொதுமக்கள் அதிகமாக வரும் இத்தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.இதே போல் நகரின் பல இடங்களில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தண்ணீர் சேமித்தால் கொசுப்புழு உருவாகுவதை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். அதே நேரம் நகராட்சி பாதாள சாக்கடை நிறைந்து வெளியேறுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிகாரிகள் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தடுக்கவும், மக்கள் சுகாதாரம் காக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X