பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.13 கோடி நலத்திட்ட உதவிகள்

Added : நவ 29, 2019
Advertisement

முதுகுளத்துார்: -கொழுந்துரை கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் வீரராகவ ராவ் கலந்து கொண்டு 245 பேருக்கு 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முதுகுளத்துார் அருகே கொழுந்துரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். பரமக்குடி கோட்டாட்சியர் ரவீந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் தாசில்தார் செந்தில்வேல் வரவேற்றார். 245 பேருக்கு 1.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் தென்னரசு, அமர்நாத் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசரவணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X