பொது செய்தி

தமிழ்நாடு

வரதட்சணைக்கு வறுமைதான் முதல் காரணம்: நீதிபதி ராமகிருஷ்ணன் பேச்சு

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: வரதட்சணை எதிர்ப்பு நாளையொட்டி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணர்திறன் பயிலரங்கம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது: நாட்டின் பெரும் பிரச்னையாக உள்ள வரதட்சணைக்கு முதல் காரணம் வறுமைதான். குடும்பத்தில் இருக்கும் ஆணுக்கு வேலை போய் விட்டாலோ, போதுமான வருமான இல்லாத நிலையில் இருக்கும் ஆண்கள் அதை வெளியில் சொல்ல முடியாமல் பெண்களிடம் உங்கள் தந்தையிடம் சென்று காசு வாங்கி வாருங்கள் என்று சொல்லுவார்கள். நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் 10 சதவீதம் வரதட்சணை சம்பந்தபட்டவையாக உள்ளது. இதில் 50 சதவீத வழக்குகள் அவர்களின் சுய புரிதல்களிலே தீர்த்து வைக்கப்படுகிறது.குடும்பங்களில் சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ளாததால் தான் பிரச்னை ஏற்படுகிறது. குடும்பங்களில் பேசி தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை. பெண்களை பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருக்கிறது. இதை முறையாக நடைமுறைப்படுத்த நீதித்துறை இருக்கிறது. குடும்பம் அமைதியாக இருந்தால் தான் வீடு நன்றாக இருக்கும். வீடு நன்றாக இருந்தால் சமூகமும், அதை சார்ந்த நாடும் நன்றாக இருக்கும்,என்றார்.மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ஜெயந்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் கலந்து கொண்டனர். சமூகநலத்துறை பாதுகாப்பு அலுவலர் நாகஜோதி நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் போலீஸ் பெண் அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு தலைவிகள், மகளிர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X