கடலில் கலக்கும் கழிவு நீரால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடி தொழிலை பிரதானமாக கொண்டு நாட்டு படகு மற்றும் விசை படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.

இங்குள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங் கழிவுகள் நேரடியாக திருப்பாலைக்குடி கடலில் கலக்கிறது.

கடலோர பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கடல் பகுதியில் உள்ள அரிய வகை பவளப் பாறைகளும், அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை உள்ளிட்டவைகள் கடல் மாசுவால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலில் கலக்கும் கழிவு நீருக்கு ஊராட்சி நிர்வாகம் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும், என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X