பொது செய்தி

தமிழ்நாடு

சக்கரக்கோட்டையில் காய்ச்சல் பாதிப்புசுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம்

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததால் அப்பகுதியில் சுகாதாரத்துறையினர்சிறப்பு முகாம்கள் அமைத்து கொசுப்புழு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சக்கரக்கோட்டை ஊராட்சி நேரு நகர், மஞ்சன மாரியம்மன் கோயில் தெரு, மகாசக்தி நகர், ஜோதி நகர் பகுதிகளில்13 க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு பகுதியில் 5 பேருக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் 'ஹாட் ஸ்பாட்டாக' அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம்களை நடத்துகின்றனர்.சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனைசெய்யப்பட்டது. அங்கு கொசுப்புழுக்களை அழிக்க மருந்து, புகை மருந்து அடிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீரை மூடிவைத்து பயன்படுத்தவும், பாத்திரங்களை பிளீச்சிங் பவுடர்போட்டு சுத்தம் செய்யவும் கூறினர். கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிகளில்ஈடுபட்டனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரப்பெருமாள் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் வினோத்குமார், தங்கவேல், நம்புசீனிவாசன், குமார், மோகன்ராஜ், ஊராட்சி செயலர் விமல் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X