பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரிகட்டடத்திற்கு மண் பரிசோதனை

Added : நவ 29, 2019
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை கட்டடங்களுக்கான மண் பரிசோதனை நடந்தது.ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை 345 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ளது.

முதற்கட்டமாக நவ.,21ல் தமிழ்நாடு மருத்துவக்கல்லுாரி இயக்குனரக துணை இயக்குனர் சபீதா தலைமையில் இயக்குனரக குழுவினர் அரசு மருத்துவக்கல்லுாரி அமையும் இடமான பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகில் உள்ள 22 ஏக்கர் நிலத்தையும், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமையும் இடமான ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தையும் ஆய்வு செய்தனர்.இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை கட்டடங்கள் கட்டும் இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து மண்மாதிரி எடுக்கப்பட்டது. காசநோய் பிரிவு பகுதி, பிரேத பரிசோதனை பகுதி, மற்றும் மருத்துவக்கல்லுாரி அமையும் இடமான அம்மா பூங்கா பகுதிகளில் மண் பரிசோதனையை பொதுப்பணித்துறையினர் நடத்தினர். மண் பரிசோதனை ஆய்வு முடிந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கான மாதிரி இறுதிக்கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு கட்டடத்திற்கான பணிகள் துவங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X