சம்பவம் செய்தி

தமிழ்நாடு

70 பவுன் நகை கொள்ளை மேலும் 2 பேர் கைது

Added : நவ 29, 2019
Advertisement

திருவாடானை: திருவாடானை அருகே 70 பவுன் நகை கொள்ளையடிக்கபட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை அருகே பெருவாக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி சாரதா 55. கருப்பையா வெளிநாட்டில் உள்ளார். நவ.17 இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 70 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இது குறித்து திருவாடானை டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் கலா ராணி, எஸ்.ஐ.க்கள் நவநீதகிருஷ்ணன், தாஸ் மற்றும் போலீசார் மதுரையில் பதுங்கியிருந்த சிங்கம்புணரியை சேர்ந்த முகமது அப்பாஸ் 32,மதுரையை சேர்ந்த ஹரி 19, யாசர் 19, ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.இதில் தொடர்புடையை அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் 32, மோகன் 33, ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. சாரதா வீட்டிற்கு எதிரில் முகமது அப்பாஸ் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அவரது தகவலின் பேரில் கொள்ளையடித்தாக வாக்கு மூலத்தில்மற்ற திருடர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X