சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை: கணவர், 2வது மனைவி மீது வழக்கு

Added : நவ 29, 2019
Share
Advertisement
ராமநாதபுரம்: பரமக்குடியில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்த கணவர், இரண்டாவது மனைவி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் தலைமையில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ராமாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்த செல்வன் 29. இவர்

ராமநாதபுரம்: பரமக்குடியில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி இரண்டாவது திருமணம் செய்த கணவர், இரண்டாவது மனைவி உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் தலைமையில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ராமாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்த செல்வன் 29. இவர் சத்திரக்குடி கொடிக்குளம் வடக்கு தெருவை சேர்ந்த திவ்யா 23, என்பவரை திருமணம் செய்துள்ளார்.திவ்யாவிடம் 20 பவுன் நகை வரதட்சணை கேட்டும், மாமனார் ராமகிருஷ்ணன் தொல்லை கொடுத்த நிலையில், செல்வன் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக எஸ்.பி., வருண்குமாரிடம் திவ்யா புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார். பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் செல்வன் 29, ராமகிருஷ்ணன் 60, உறவினர் புனிதா 35, இரண்டாவது மனைவி கார்த்திகா 22, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X