மீனவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் பலி

Added : நவ 29, 2019
Share
ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து பெரிய ரக நாட்டு படகில் மீன் பிடிக்க செல்வதற்கு நேற்று மீனவர் ரோஸ்டன் 23, என்பவர் கரையில் இருந்த சிறிய ரக நாட்டு படகில் ஏறி சென்றார். அப்போது கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறிய மீனவர் கடலில் தவறி விழுந்தார். உடனிருந்த மற்ற மீனவர்களும் கடலில் விழுந்த மீனவரை தேடியும் கிடைக்காததால், அவர்

ராமேஸ்வரம்: பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து பெரிய ரக நாட்டு படகில் மீன் பிடிக்க செல்வதற்கு நேற்று மீனவர் ரோஸ்டன் 23, என்பவர் கரையில் இருந்த சிறிய ரக நாட்டு படகில் ஏறி சென்றார். அப்போது கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறிய மீனவர் கடலில் தவறி விழுந்தார். உடனிருந்த மற்ற மீனவர்களும் கடலில் விழுந்த மீனவரை தேடியும் கிடைக்காததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மண்டபம் மரைன் எஸ்.ஐ., கணேசமூர்த்தி வழக்கு பதிந்து மீனவர் உடலை தேடி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X